சென்னை கடற்கரையில் சீரணி அரங்கம் தரைமட்டம்: அரசு நடவடிக்கை
சென்னை:
சென்னை நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான சீரணி அரங்கத்தை தமிழக அரசு நேற்றிரவு திடீரென்றுஇடித்துத் தரைமட்டமாக்கிவிட்டது.
|
இடிக்கப்படும் சீரணி அரங்கம்
ஆனால், அதில் ஜோதிடரின் அறிவுரை பின்னணியில் இருந்ததாக புகார் எழுந்தது.
இந் நிலையில் கண்ணகி சிலைக்கு அருகாமையில் உள்ள சீரணி அரங்கம் இப்போது இடித்துத்தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் கம்பீரமாக நின்றிருந்த வரலாற்றுச் சின்னம் அது. நீண்ட வரலாறை தன்னுள் பொதித்து வைத்துள்ளநினைவிடம். வெறும் மாநாட்டு அரங்காக மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை பார்த்தமெளன சாட்சி அது.
கடந்த 1970களில் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது சீரணி அரங்கம். பொதுக்கூட்டம், மாநாடு நடத்தவிரும்புவோருக்கு வசதியாக இந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. இங்கு அண்ணா முதல்பல்வேறு தலைவர்கள் வரை பேசியுள்ளனர்.
பல்வேறு மத மாநாடுகள் நடந்துள்ளன.
தற்போது இந்த சீரணி அரங்கத்தை அதிகாரிகள் இடித்துத் தள்ளி விட்டனர். நேற்றிரவு 11.45 மணியளவில்பொக்லைன் இயந்திரத்துடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரணி அரங்கத்திற்கு வந்தனர்.
அங்கு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சாலையோர மக்களை விரட்டியடித்தனர். ஏராளமான போலீஸாரும்வந்தனர். பின்னர் அரங்கம் இடித்துத் தள்ளப்பட்டது. முக்கால்மணி நேரத்தில், இருந்த இடம் தெரியாமல் சீரணிஅரங்கம் இடிக்கப்பட்டு விட்டது.
சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும், கடற்கரையில் உள்ள 3 கட்டடங்கள்முதல்வருக்கு வாஸ்துப்படி ராசியில்லை, எனவே அவற்றை இடித்து விட்டால் சரியாகி விடும் என்று ஜோதிடர்கூறியதாக பேசப்பட்டது.
அதன்படியே முதலில் கண்ணகி சிலை அகற்றப்பட்டது. அதற்கடுத்து ராணி மேரிக் கல்லூரியைஇடிக்க முயற்சி நடந்தது. இப்போது சீரணி அரங்கம் இடிக்கப்பட்டுள்ளது.
சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதை அறிந்து அங்கு விரைந்த பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டனர். இடிப்பைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள் தடுக்கப்பட்டார்கள்.
கடுமையான வார்த்தைகளால் அவர்களை விரட்டிய போலீஸார் அவர்களின் கேமராக்களைப் பிடுங்கி வைத்துக்கொண்டனர். பின்னர் பத்திக்கைகாரர்கள் கடுமையாக சண்டை போட்ட பின்னரே திருப்பிக் கொடுத்தனர்.


