For Daily Alerts
Just In
சென்னை-குமரி இடையே புதிய ரயில்
சென்னை:
சென்னையிலிருந்து ஈரோடு, சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு வாராந்திர ரயில் விடப்படும் என்றுமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னையிலிருந்து ஈரோடு, சேலம் வழியாக மேலும் ஒரு ரயில் விடுமாறுகன்னியாகுமரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் சென்னையிலிருந்து, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக புதிய வாராந்திர ரயில் விடப்படும்.
சென்னை வில்லிவாக்கம்-அண்ணா நகர் இடையே அமைக்கப்பட்டு வரும் மின்சார ரயில் பணிகள் அடுத்தமாதத்துடன் முடிவடைந்து விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றார்.


