அழகிரி ஜாமீனில் விடுதலை: பெங்களூரில் தங்கியிருக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மு.க. அழகிரிக்குசென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் வழங்கிய நீதிபதி கனகராஜ், அழகிரி பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும் எனவும் தினமும் அங்குள்ளமுதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கடந்த மே மாதம் 21ம் தேதி அழகிரி கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 82 நாட்கள் கடந்துவிட்டநிலையில், இன்னும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், இதனால் அழகிரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாதுஎனவும் தமிழக போலீசார் கூறிக் கொண்டிருப்பது நியாயமல்ல என நீதிபதி கூறினார்.

தனக்கு ஜாமீன் கோரி மதுரை நீதிமன்றத்தில் அழகிரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர்உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடியானது. இந் நிலையில் இப்போது அவருக்கு ஜாமீன் தரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+