போயஸ் தோட்டத்தை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டலாம்: ஜெயாவுக்கு ப.சிதம்பரம் பதில்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:

போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா மற்றும் தலைமை செயலகத்தை இடித்துவிட்டுராமர் கோவில் கட்டலாம் என காங்கிரஸ் ஜனநாயக பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.

அவரது கட்சியின் சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் காமராஜர் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது.

இதில் சிதம்பரம் கூறியதாவது:

ராமருக்கு இந்தியாவில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்ட முடியும் என்று ஜெயலலிதா கேள்வி கேட்டுள்ளார்.

தமிழக தலைமை செயலகத்தை இடித்து விட்டோ, அல்லது போயஸ் தோட்டத்திலோ கோவில் கட்ட வேண்டியதுதானே?. ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்க வில்லை. மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டுவதைதான் எதிர்க்கிறோம்.

கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு ஆதரவு, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு, பொது சிவில்சட்டத்திற்கு ஆதரவு என ஜெயலலிதா மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அது அத்வானிக்காக அவர்தந்து வரும் ஆதரவு. எதிர்காலத்தில் அத்வானியின் கீழ் துணைப் பிரதமராவதற்காகத் திட்டம் போட்டு தரும்ஆதரவு.

வருங்காலத்தில் ஜெயலலிதா, வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் செல்லப் பிள்ளையாக திகழ்வார்.

அதிமுக, திமுக அல்லாத புதிய கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு மறுமலர்ச்சி கிடைக்கும். இதைஇப்போதே சிந்திக்கவேண்டும். அப்போதுதான் 2006-சட்டசபை தேர்தலில் செயல்படுத்த முடியும். திமுக, அதிமுகஆகிய 2 கட்சிகளையும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை பகை கட்சியாக கருதவில்லை.

இருந்தாலும் இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கு வழி காட்டக்கூடியதலைவர்களாக இல்லை. காங்கிரஸ் கட்சி திராவிட கட்சிகளின் மீது சவாரி செய்வதை மட்டுமே விரும்பி ஓட்டப்பந்தயத்தில் ஓட மறுத்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த நிலை மாற வேண்டும். மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையைமாற்றி ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்ததை போல தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத ஒரு புதிய கட்சியின்ஆட்சி அமைய வேண்டும்.

இதற்காக பா.ம.க. கம்யூனிஸ்டு, மதிமுக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் தலைவர்களுக்கு நம்பிக்கையைஏற்படுத்தவேண்டும். திருவாரூர் பகுதியில் விவசாயிகள் வறுமையின் காரணமாக எலிக்கறி சாப்பிடுவதாகசெய்திகள் வெளி வந்தது.

இதற்கு எலிக்கறி மிகவும் சுவையானது என்றும் அதனால் தான் மக்கள் அதை சாப்பிடுகிறார்கள் என்றும் அதிமுககூறியது. எலிக்கறி சுவையானது என்றால் ஜனாதிபதி, பிரதமர், துணை பிரதமர் ஆகியோர் தமிழகம் வரும் போதுஅரசு விருந்தில் அவர்களுக்கு எலிக்கறி பரிமாற வேண்டியது தானே.

தமிழக மக்கள் 35 ஆண்டுகளாக ஆட்சி அமைப்பது திமுகவா? அதிமுகவா? என்ற பட்டிமன்றத்திற்கு மாறி மாறிதீர்ப்பளிக்கிறார்கள்.

கேள்வி கேட்கும் உரிமையே இல்லாத அதிமுகவுடன் ஓப்பிடும் போது திமுக சிறந்த கட்சிதான். அந்த கட்சியில்ஜனநாயகம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து காங்கிரஸ் ஜனநாயக பேரவை முற்றிலும் மாறுபட்ட கட்சி.

இதை சொல்வதால் காங்கிரஸ் எங்களுக்கு பகை என கருதக்கூடாது. தோழமை கட்சி தான். இதே போன்று பா.ம.க.,ம.தி.மு.க, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சியாக திகழ வேண்டும் என்பதே எங்கள்விருப்பம் என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+