ரயில் நிலையங்களில் பெப்சி, கோக்குக்கு தடை
சென்னை:
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் பெப்சி, கோக் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகரயில்வேத்துறை இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
ரயில் நிலையங்களில் பெப்சி. கோக் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து வகையான குளிர் பானங்களையும் விற்கதடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நடத்தி வரும் ஆய்வைப் பொறுத்து இந்தத் தடைநிரந்தரமாக்கப்படும் அல்லது விலக்கப்படும்.
தமிழகத்தில் ரயில்வே கோட்டத்தை இரண்டாகப் பிரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
குறை இருந்தால் நிரந்த தடை
இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்படும் கோக் மற்றும் பெப்சி குளிர்பானங்களில் வரையறுக்கப்பட்டஅளவை விட கூடுதலான அளவில் நச்சுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவற்றிற்குத் தடைவிதிக்கப்படும் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் என்.டி.சண்முகம் எச்சரித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய ஊர்களிலிருந்து எடுக்கப்பட்ட கோக், பெப்சி உள்ளிட்டகுளிர்பானங்களின் மாதிரிகள் மைசூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆய்வின்போது, பூச்சிக் கொல்லி மருந்துகள், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதுதெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இந்தியாவில் விற்பனைக்கே தடை விதிக்கப்படும்.
ஐரோப்பிய நாடுகளின் தரத்தில்தான் இந்தியாவிலும் கோக் மற்றும் பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்கள்தயாரிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது என்றார்.
ஏ.கே. மூர்த்தியும், சண்முகமும் பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெப்சி, கோக்குக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதில் ராமதாஸ் தீவிரமாக இருப்பது நினைவுகூறத்தக்கது.
தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்:
இதற்கிடையே கோக், பெப்சியை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், நடு ரோட்டில் கோக், பெப்சி, பேன்டா குளிர்பான பாட்டில்களைபோட்டு உடைத்துப் போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறுகையில், நாடாளுமன்றத்தில் மட்டும் இந்த குளிர்பானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது நியாயமமல்ல. எம்.பிக்கள் மட்டும் உயிரோடு இருந்தால் போதுமா?
பொதுமக்களின் உயிரையும் அரசு மதித்து, நாடு ழுவதிலும் இந்த குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்என்றனர்.
மதுரையில், நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் தலைமையில் பெப்சி, கோக்கை குப்பையில் கொட்டும்போராட்டம் நடந்தது. தபால் தந்தி அலுவலகம் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட்கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


