For Daily Alerts
Just In
எஸ்மா, டெஸ்மாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புது வழக்கு
சென்னை:
எஸ்மா சட்டம் மற்றும் டெஸ்மா சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழககூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சங்க செயலாளர் தண்டபாணி தொடர்ந்துள்ள ரிட் மனுவில், எஸ்மா சட்டம் பயன்படுத்தப்பட்டதுசெல்லாது. மேலும் டெஸ்மா சட்டம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் செல்லாது என்று அறிவிக்கவேண்டும்.
இந்த வழக்கு விசாக்கப்பட்டு முடியும் வரை எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டப்படி எடுக்கப்பட்ட அனைத்துநடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தநீதிபதி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.


