காஞ்சியில் ஜெ: கோ பூஜையில் பங்கேற்றார்
காஞ்சிபுரம்:
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை காஞ்சிபுரம் சென்றார். அங்கு காஞ்சி மடத்தில் உள்ள காமாட்சி அம்மன்கோவிலில் நடந்த கோ பூஜையில் கலந்துகொண்டார்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் 69-வது பிறந்த நாள் விழா இன்று காஞ்சிபுரத்தில் நடக்கிறது. இதில்கலந்து கொள்வதற்காக இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் ஏனாத்தூர் சென்றார் ஜெயலலிதா. அங்கு அவருக்குபூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது
அமைச்சர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் காஞ்சி சென்றார் ஜெயலலிதா.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற ஜெயலலிதா, உலக அமைதிக்காக நடந்த யாகம்மற்றும் சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டார். கோ பூஜையிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சி சங்கராச்சாயார்கள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிற்பகலில் அவர் மறைந்த காஞ்சிப் பெயவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சமாதிக்குச் சென்றுவணங்குகிறார். பின்னர் மாலையில் நடைபெறும் ஜெயேந்திரர் பிறந்த நிாள் விழாவில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவும் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications