காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்: சென்னை கமிஷனர் நேரடி விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்துசம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் நேரடியாக விசாரணைநடத்தினார்.

வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் தனது செல்போன் காணாமல் போனது தொடர்பாக புகார் கொடுக்கதிருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது அவருடன் சில வழக்கறிஞர்களும் உடன்சென்றனர்.

அவர்களை போலீஸார் சரிவர நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில்வழக்கறிஞர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், அனைவரையும் கைது செய்ய போலீஸார் முயன்றதாகவும்கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்விசாரித்தது.

பின்னர், இதுதொடர்பாக கமிஷனர் விஜயக்குமாரே நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படிநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து செந்தில்குமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் மற்றும்இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 வழக்கறிஞர்களிடம் விஜயக்குமார் நேரடி விசாரணை நடத்தினார்.

இன்று தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் கமிஷ்னர் விஜய்குமார் தார்க்கல் செய்வார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+