For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலர் தற்கொலை: திருடா திருடி பட ஹீரோயினிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Actress sugi with dhanush in Thiruda Thirudi

திருடா திருடி படத்தில் தனு
சினிமா, டிவி நடிகையான ஸ்வேதா என்ற பவானி என்ற சுகியின் வீட்டில் அவரது காதலரான தெலுங்கு நடிகர்ராகவேந்திரா மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மூன்றாவதுநாளாக இன்றும் நடிகை சுகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ராகவேந்திரா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அவர் விஷம் கொடுத்து கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தனுஷ் நடித்துள்ள திருடா திருடி படத்தில் இரண்டாவது ஹீரோயினாகவும், பிஸி படத்தில் ஹீரோயினாவும்நடித்து வரும் சுகி சென்னை மேற்கு மாம்பலம் சியாமளா வரதன் தெருவில் வசித்து வருகிறார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தெலுங்கில் சிறிய ரோல்களில் நடித்து வந்த ராகவேந்திராவுடன் காதல் ஏற்பட்டது.இந் நிலையில் சுகியும் சினிமாவில் நுழைந்தார். அது முதல் அவருக்கு பல திரையுலகப் புள்ளிகளுடன் தொடர்புஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சுகியை ராகவேந்திரா வற்புறுத்திவந்துள்ளார். இந் நிலையில் நேற்று முன்தினம் சுகியின் வீட்டிலேயே ராகவேந்திரா தூக்கு போட்ட நிலையில்கண்டுபிடிக்கப்பட்டார்.

நடிப்பது தொடர்பாக சுகிக்கும் ராகவேந்திராவுக்கும் இடையே வழக்கமான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,அப்போது சுகியை ராகவேந்திரா அடித்ததாகவும், அதில் சுகி மயங்கி விழ, அவர் இறந்துவிட்டதாக பயந்தராகவேந்திரா தூக்கு போட்டுக் கொண்டதாகவும் சுகியின் வீட்டினர் போலீசிடம் தெரிவித்தனர்.

Sugi

நடிகை சுகி
ஆனால், ராகவேந்திராவின் தாயாரும் தந்தையும், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக புகார்கொடுத்ததையடுத்து நடிகை சுகியிடம் போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தான் நடிபபது பிடிக்காமல் ராகவேந்திரா மனமுடைந்து 2 தடவை விஷம் குடித்து தற்கொலைக்குமுயன்றதாகவும் அப்போதெல்லாம் நான் தான் அவரைக் காப்பாற்றினேன் எனவும் போலீசாரிடம் சுகிதெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் நடந்த அன்று இந்த வாக்குவாதம் முற்றியது. அப்போது அவர் தன்னைத்தானேஅரிவாள்மனையால் வெட்டிக் கொள்ள முயன்றார். நான் அதைத் தடுத்தபோது என்னை முகத்தில் குத்தினார்.

இதனால் நான் மயங்கி விழுந்தேன். கொஞ்ச நேரம் கழித்து எழுந்திருந்தேன். அப்போது அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் என்றும் சுகி கூறியுள்ளார்.

ஆனால், ராகவேந்திராவின் தாயார் நாகமணி இதை மறுத்துள்ளார். போலீசாரிடம் அவர் கூறியுள்ளதாவது:

என் மகன் சுகியை திருமணம் செய்ய விரும்பினான். ஆனால், சினிமா, டிவியில் நடித்து கையில் காசு சேர்ந்ததும்என் மகனை சுகி உதறிவிட்டாள். நடிகை சுகியை அடிக்கடி என் மகன் தொந்தரவு செய்வதாக நினைத்து அவனுக்குசுகி வீட்டினரே விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டுள்ளார்கள் என்றுசந்தேகப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

Raghavendra

தற்கொலை செய்து கொண்ட ராகவேந்திரா
இந் நிலையில் ராகவேந்திராவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்என்று தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. ராகவேந்திராவின் சாவுக்கு, நடிகைசுகி எந்தவிதத்தில் காரணமாக இருந்தார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலையாகவேஇருந்தாலும், தற்கொலையை சுகி தூண்டினாரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Actress sugi with dhanush in Thiruda Thirudi

திருடா திருடி படத்தில் தனு
இது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்தால், தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக சுகி கைது செய்யப்படலாம்என்று தெரிகிறது. தனிப் படை அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணை நடக்கிறது.

இந் நிலையில் அசோக் நகர் போலீஸார் 3-வது நாளாக இன்றும் நடிகை சுகியிடம் விசாரணை நடத்தினர். சுகியைஅசோக் நகர் காவல் நிநலையத்திற்கு வரவழைத்து இந்த விசாரணை நடந்தது.

விசாரணைக்குப் பின் வெளியே வந்த நடிகை சுகி செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் சினிமாவுக்கு வரக்காரணமே ராகவேந்திராதான். திடீரென நான் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று ராகவேந்திரா கூறினார். இதனால்எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்கேபுரியவில்லை. போலீஸாரிடம் எல்லாவற்றையும் தெளிவாகக் கூறி விட்டேன் என்றார்.
Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X