ஆகஸ்ட் 18ல் காவிரி நிபுணர் குழுக் கூட்டம்
டெல்லி:
வறட்சி காலத்தில் காவிரி நீரை தமிழகமும், கர்நாடகமும் பகிர்ந்து கொள்வது குறித்து வரைமுறைகளை உருவாக்ககாவிரி நிபுணர் குழுவின் கூட்டம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி மீண்டும் டெல்லியில் கூடுகிறது.
இதில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள், நிபுணர்கள், தமிழகம். கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி மாநிலகாவிரி நிபுணர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
நிபுணர் குழுவின் தலைவர் ஆர்.கே. சர்மா தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு காவிரிகண்காணிப்புக் குழுவிடம் அறிக்கையாக சமர்பிக்கப்படும். இதையடுத்து காவிரிக் கண்காணிப்புக் குழு ஆகஸ்ட்25ம் தேதி கூடும்.
கடந்த முறை நடந்த நிபுணர் குழுக் கூட்டத்திலும், காவிரி ஆணையக் கூட்டத்திலும் வறட்சி கால நீர் பகிர்வு குறித்துஎந்த முடிவும் எட்டப்படவில்லை. தமிழக, கர்நாடக நிபுணர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் முடிவுஎடுக்கப்படாமலேயே அந்தக் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில் 18ம் தேதி மீண்டும் காவிரி நிபுணர் குழு கூடவுள்ளது.












Click it and Unblock the Notifications