செம்மொழிப் போராட்டம்: டெல்லி உண்ணாவிரதத்தில் குமரி அனந்தனும் பங்கேற்பு
சென்னை:
தமிழை செம்மொழியாக்கக் கோரி டெல்லியில் தமிழறிஞர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குமரிஅனந்தனும் கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி வருகிற 18ம் தேதிடெல்லியில் நாடாளுமன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில் எனது இலக்கியப்பேரவையும் கலந்து கொள்கிறது. அதன் சார்பாக நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன்.
பாரதியார் நூற்றாண்டு விழாவை 52 வாரங்களும், பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை 52 வாரங்களும் எங்களதுஇலக்கியப் பேரவை அமைப்பு கொண்டாடியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் குமரிஅனந்தன்.
சட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே, தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி திருச்சி சட்டக் கல்லூ மாணவர்கள் இன்றுஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாணவர்கள் கல்லூரி நுழைவாயிலின் முன் கூடி தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி கோஷங்கள்எழுப்பினர்.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றுஅவர்கள் கோரினர்.


