சொத்து குவிப்பு: மாஜி திமுக எம்.எல்.ஏ. குடும்பத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்
தூத்துக்குடி:
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்தது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில், முன்னாள்எம்.எல்.ஏவும், தென் மாவட்டங்களின் மிக முக்கிய திமுக தலைவர்களில் ஒருவருமான பெரியசாமி, தனதுமனைவி, மகள் ஆகியோருடன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஆண்டுமார்ச் மாதம் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்களின் வீடுகளில் அதிரடிசோதனைகள் நடத்தினர்.
அதில் பெயசாமியின் வீடும் ஒன்று. தனது வருமானத்தையும் மீறி அதிக அளவில் சொத்து குவித்துள்ளதாகபெரியசாமி மீதும், அவரது மகளும் திமுக பஞ்சாயத்துத் தலைவருமான கீதா ஜீவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்காக பெரியசாமி,அவரது மகள், மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.












Click it and Unblock the Notifications