சென்னை-சிங்கப்பூர் இடையே சுற்றுலா கப்பல் போக்குவரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா கப்பல் போக்குவரத்தைத் தொடங்கசென்னை துறைகப் பொறுப்புக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பொறுப்புக் கழகத்தின் தலைவர் பாஸ்கரதாஸ் கூறுகையில், முன்பு சென்னையிலிருந்துசிங்கப்பூருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இருந்தது. எனவே மீண்டும் அதை கொண்டு வர முடிவுசெய்துள்ளோம்.
முதல் கட்டமாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு சென்னையிலிருந்து சுற்றுலா கப்பல் போக்குவரத்துதொடங்கப்படும். இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. கப்பல் போக்குவரத்தை நடத்ததனியார்களிடமிருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கோவா, மும்பை, கொச்சின் ஆகிய நகரங்களிலிருந்து சிங்கப்பூருக்கு கப்பல் போக்குவரத்து உள்ளதுஎன்றார் அவர்.












Click it and Unblock the Notifications