கருணாநிதிக்கு காங்கிரஸ் துணை நிற்கும்: சோ.பா.
சென்னை:
கருணாநிதிக்கு காங்கிரஸ் துணையாக நிற்கும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மக்கள் நலத் திட்டங்கள் ஏதுவுமே இந்த ஆட்சியில் நடைபெறவில்லை. இதை மக்கள் உணர்ந்துவிடாமல்இருக்கவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பவுமே முன்னாள் திமுக அமைச்சர்கள் வீடுகளில் சோதனைநடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா ஆந்திரா, கர்நாடகா,கேரளா ஆகிய முதலமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசி குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களை திசை திருப்பவதில் கவனம் செலுத்தக் கூடாது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கொடுமையானது.ஜனநாயகத்தின் பெயரால் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு அமைப்புஉருவாக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறிய கருத்தை வரவேற்கிறோம். இதற்கு காங்கிரசும்அவருக்குத் துணை நிற்கும் என்றார்.
தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் ஒரு அணியை உருவாக்குவதற்கு முன், ஒன்று திரண்டு ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என கருணாநிதி கூறியுள்ளது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications