அடிபட்ட தம்பி மயக்கம்: பயத்தில் சிறுமி தற்கொலை
தூத்துக்குடி:
விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மோதலில் தம்பியை அடித்தார் சகோதரி. அதில் தம்பிமயக்கமடைந்ததால், அவன் இறந்து விட்டதாக கருதி பயந்து போய் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார் அந்த பரிதாபச் சிறுமி.
தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதி கால்வின் மற்றும் ஆஸ்டி. இவர்களது குழந்தைகள் ஜெய்சித்ரா, நவநீதா (13),நிஷாந்த் (11) ஆகியோர்.
நேற்று தந்தை கால்வின், தாயார் ஆஸ்டி ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தனியே இருந்தநவநீதாவும், நிஷாந்த்தும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நிஷாந்த் தனது அக்காவை அடித்துள்ளான். இதனால் கோபமடைந்த நவநீதா, நிஷாந்த்தை திருப்பிஅடிக்க இதில் கீழே விழுந்த நிஷாந்த் மயக்கமடைந்தான்.
பயந்து போன நவநீதா, நிஷாந்த்தை எழுப்ப முயன்றாள். ஆனால், நிஷாந்த் எழுவில்லை. மயக்கத்திலேயேஇருந்தான். அவன் இறந்து விட்டதாக கருதிய நவநீதா பயந்து போய் வீட்டுக்கு வெளியே இருந்த மரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த நிஷாந்த், தனது அக்கா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அலறினான்.அதன் பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, ஏற்கனவே நவநீதா இறந்து விட்டது தெரியவந்தது.
இந்தக் கொடுமையான சம்பவம் அந்தப் பகுதியையே பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.












Click it and Unblock the Notifications