காங்கிரஸ் மறியல்: பா.ஜ.க. போட்டி போராட்டம்- புதுவையில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களும், தலைவர்களும் ஒரே இடத்தில் போட்டி போட்டிக்கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பாண்டிச்சேரி பா.ஜ.க. தலைவர் கார்த்திகேயன் என்பவர், சோனியா காந்தி குறித்து விமர்சித்து பத்திரிக்கைகளில்விளம்பரம் செய்திருந்தார். இதைப் பார்த்த காங்கிரஸார் கொந்தளித்தனர்.

கார்த்திகேயன் வீட்டுக்கு விரைந்த காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸார் அங்கு அவரதுவீட்டுக்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த பா.ஜ.க.வினரும் அங்கு விரைந்தனர்.

அவர்கள் காங்கிரஸ்காரர்களை சூழ்ந்து நின்று கொண்டு மறியல் செய்தனர். இதனால் அங்கு பெரும் மோதல்மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு போலீசார் கூறினர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை.

இதையடுத்து அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்த போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்து வேன்களில்அள்ளிப் போட்டுச் சென்றனர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் நாராயணசாமியும் கைது செய்யப்பட்டார்.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தான் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+