For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு ஊழியர்களுக்கு ஜெயலலிதா மீண்டும் "குட்டு"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு அலுவலகத்தை கோவிலாக கருத வேண்டும், பொது மக்களை தெய்வமாக வணங்க வேண்டும். கோவில்பணியை சரியாகச் செய்யாதவர்களை, பொது மக்களாகிய தெய்வங்கள் நின்று கொல்வார்கள் என்று முதல்வர்ஜெயலலிதா குறிப்பிட்டார்.

நாட்டின் 57-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஜெயலலிதா. பின்னர் அவர் பேசியதாவது:

பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியின் கீழ் நின்று பேசுகிறேன். கோவிலிலும் கொடிக் கம்பம் உண்டு. அந்தவகையில் இந்த தலைமைச் செயலகம் ஒரு கோவில்தான்.

இங்கு குடியிருக்கும் தெய்வம் யார் தெரியுமா? பொது மக்கள்தான்.

அந்த தெய்வத்திற்கு வழிபாடு செய்ய வந்திருப்பவர்கள்தான் நாம் அனைவரும். கடை நிலை ஊழியர் முதல்முதல்வராகிய நான் வரை அந்த தெய்வத்திற்கு பணியாற்ற வந்தவர்கள்தான்.

இது எனது கருத்து மட்டுமல்ல, அசைக்க முடியாத நம்பிக்கையும் கூட. நம்மை வாழ வைக்கும் தெய்வங்களாகியபொது மக்களுக்கு கடமை என்னும் வழிபாட்டை செய்யத் தவறினால் தெய்வம் நின்று கொல்லும் என்ற முதுமொழிஉண்மையாகி விடும்.

மக்கள் பணிக்காகத்தான் அரசு அலுவலகங்கள், மக்கள் பணிக்காத்தான் அலுவலர்கள், மக்கள் பணிக்காகத்தான்எல்லோரும். இதை யாரும், எந்த வேளையிலும் மறந்து விடக் கூடாது.

இந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரைஅறிவியல் தமிழ் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளேன்.

தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த அரசு கேட்டுக் கொள்கிறது. டெல்லியில்உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை (Tamil chair) நிறுவுவதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒரேதவணையில் தந்தது என் அரசு.

தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, முதல் பத்து கிலோ ரூ. 3.50க்கும், அடுத்த 10 கிலோ ரூ. 6க்கும்வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி நிலையைக் கருதி இந்த கசப்பு மருந்தை சிறிது காலத்திற்குப் பொருத்துக்கொள்ளுமாறு பொது மக்களை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இனி 20 கிலோ அரிசியும் ரூ. 3.50க்கே வினியோகிக்கப்படும் என்ற இனிப்பான செய்தியை இந்த நாளில்அறிவிக்கிறேன்.

அதேபோல, ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட இலவச வேஷ்டி, சேலைத்திட்டம் வரும் பொங்கல் முதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்ஜெயலலிதா.

கல்பனா சாவ்லா விருது:

நிகழ்ச்சியின்போது பல்வேறு விருதுகளையும் ஜெயலலிதா வழங்கினார்.

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள விருதை, சென்னையைச் சேர்ந்தகராத்தே வீராங்கனை ரேஷ்மா சர்மாவுக்கு ஜெயலலிதா வழங்கினார். இந்த விருதைப் பெறும் முதல் பெண்மணிரேஷ்மாதான்.

பெண்கள் பாலியல் பலாத்காரத்திலிருந்து எப்படிப் தப்பிப்பது என்பது குறித்தும், ஊனமுற்ற, கண் பார்வையற்றபெண்கள் தங்களை எப்படி எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்வது என்பது குறித்தும் கராத்தே பயிற்சி அளித்துவருகிறார் ரேஷமா.

முன்னதாக சுதந்திர தின அணிவகுப்பில் நாட்டிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள பெண் போலீசாரின்கமாண்டோ படையினரும் கலந்து கொண்டனர். இந்த கமாண்டோ படை பங்கேற்கும் முதல் சுதந்திர தினஅணிவகுப்பு இது தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X