ஏமாற்ற ஜெ. தயார், ஏமாற மக்களும் தயார்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே ரேஷன் கடையில் விற்கப்படும்அரிசியின் விலையை தமிழக அரசு குறைத்துள்ளதாகவும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் விலைஏற்றப்படும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த கருணாநிதிசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
ரேஷன் அரிசி விலை குறைப்புக்குக் காரணம் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல்தான்.தேர்தலுக்குப் பிறகு மீண்டும் விலையை ஏற்றி விடுவார்கள். மக்களை ஏமாற்ற ஜெயலலிதா அரசுதயாராகி விட்டது. ஏமாந்து போவதற்கு மக்களும் தயாராகவே உள்ளனர்.
காவிரிப் பிரச்சினையில், பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால்தான் உரிய தீர்வு கிடைக்கும்.அதுவரை இதற்கு தீர்வே கிடையாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications