நம்பிக்கையில்லா தீர்மானம்: நடுநிலை வகிக்க அதிமுக முடிவு
சென்னை:
மத்திய தேசிய ஜனநாய முன்னணிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதுநடுநிலை வகிப்பது என அதிமுக முடிவு செய்துள்ளது.
இன்று நடந்த அக் கட்சியின் செயற்க் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின்நிருபர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,
வாஜ்பாய் அரசுக்கு எங்களிடம் யாரும் ஆதரவு கேட்கவில்லை. கேட்காத ஆதரவை வலியப் போய் எல்லாம்நாங்கள் தர மாட்டோம். அந்த அவசியமே எங்களுக்கு இல்லை. இதனால் மக்களைவையில் வாக்கெடுப்புநடக்கும்போது அதிமுக எம்.பிக்கள் வெளியேறி விடுவர்.
மேலும் வாஜ்பாய் அரசுக்கு ஆபத்து ஏதும் இல்லை. இதனால் எங்கள் ஆதரவும் தேவையில்லை. காங்கிரஸ்கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திலும் எங்கள் எம்.பிக்கள் பங்கேற்கமாட்டார்கள்.
கடந்த சனிக்கிழமை எனது போயஸ் தோட்ட வீட்டுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும்பாதுகாப்பு அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொலைபேசி செய்துள்ளார். ஆனால், நான் அப்போது வீட்டில்இல்லை. எதற்காக அவர் என்னுடன் பேச விரும்பினார் என்று தெரியவில்லை.
மத்திய அரசுக்கு ஆதரவைத் தெரிவிப்பதில் திமுக ஏன் கால தாமதம் செய்தது என்று கேட்க விரும்புகிறேன்.நீங்களும் (நிருபர்கள்) இதை அவர்களிடம் (கருணாநிதியிடம்) கேட்க வேண்டும். வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவுதெரிவித்ததால் தான் நாங்கள் ஓட்டெடுப்பை புறக்கணிக்கிறோம் என்று சொல்வது நியாயமற்றது என்றார்ஜெயலலிதா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications