ராகுல் காந்தியின் மூக்கில் வழிந்த ரத்தம்.. களேபரமான டெல்லி போராட்டம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு இன்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்களை டெல்லி போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். அப்போது அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

rahul-gandhi-seen-bleeding-from-nose-when-police-detained-in-delhi-protest

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் முன்பு இன்று மாலையில் திடீரென்று காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம் நடத்தியவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தடியடிக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி உள்பட மத்திய அரசுக்கு எதிரான செயல்பாடுகளால் பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றி போராட்டம் நடத்த நேற்று முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த தடையை மீறி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மல்லிகார்ஜுன கார்கே, கேசிவ வேணுகோபால், பிரியங்கா காந்தி, பவன் கேரா, கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் இந்த தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து டெல்லி போலீசார் காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தனர்.

ராகுல் காந்தி உள்பட அனைத்து தலைவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று பஸ்சில் ஏற்றினர். இந்த வேளையில் ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. போலீசார் ராகுல் காந்தியை கைது செய்ய முயன்றபோது அவர் சம்மதிக்கவில்லை. ரோட்டில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தார். கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இது போலீசாருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிகமான போலீசார் இணைந்து ராகுல் காந்தியை கைது செய்தனர். இந்த சமயத்தில் போலீசாரின் கைகள் தெரியாமல் ராகுல் காந்தியின் மூக்கில் காயத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஸ்சிலும் சிறிது நேரம் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தார். அதன்பிறகு தான் ரத்தத்தை துடைத்தார். ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழியும் போட்டோக்கள், வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+