கோவையில் முஸ்லீம் வாலிபர் கொலை: நகரில் பதற்றம் ஒருவர் கைது, வி.எச்.பியினருக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் முஸ்லீம் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பகுஜன்சமாஜ் கட்சியினர் தான் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பகுஜன் சமாஜ்பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை காட்டுர் பகுதியில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் சர்தார் பாஷா. இவர் சில இஸ்லாமியஅமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். இவர் மீது சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந் நிலையில் நேற்றிரவு நடுரோட்டில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் அவரைசரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியது.. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் படைஉடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொலையாளிகளைப் பிடிக்க இரவோடு இரவாக சிறப்புப் படையும் அமைக்கப்பட்டது. இந்தக் விவரம் இன்றுகாலையில் கோவையில் பரவியது. இதையடுத்து நகரில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

கொலையாளிகளைக் கைது செய்யாதவரை உடலைப் பெற மாட்டோம் என சர்தாரின் உறவினர்கள் கூறிவிட்டனர்.இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுநடத்தி உடலை வாங்கிக் கொள்ளச் செய்தனர்.

இதன் பின்னர் அவரது உடல் அடக்கமும் நடந்தது.

கொலையாளிகள் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.

இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகரான கிரி என்பவர் கைது செய்யபப்ட்டுள்ளார். இந்தக் கொலையில்சம்பந்தப்பட்டுள்ளதாக கருதப்படும் மேலும் 3 வி.எச்.பியினருக்கும் வலை வீசப்பட்டுள்ளது.

கொலையில் வி.எச்.பியினருக்கும் தொடர்ரப இருந்தாலும் இந்தக் கொலை மதரீதியிலானது அல்ல என்றுதெரிகிறது. சொந்தக் காரணங்களால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாகபோலீசார் கூறுகின்றனர்.

ஏற்கனவே மதரீதியில் டென்சனான கோயம்புத்தூரில் இச் சம்பவம் பெரும் அச்சத்தைப் பரப்பியுள்ளது.இதையடுத்து நகரில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆயுதப் படை போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர். நகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+