செம்மொழி கோரிக்கை: டெல்லியில் தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம்
டெல்லி:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி டெல்லியில், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறுஅமைப்பினர் இன்று அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
உலகின் முதுபெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை, செம்மொழியாக அறிவிக்கக் கோரிநெடுங்காலமாக கோரிக்கைகள் இருந்து வருகின்றன. ஆனால், இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இந் நிலையில் செம்மொழியாக அறிவிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு உள்ள நிலையில்இந்த விஷயத்தில் மத்திய அரசு தாமதம், அலட்சியம் காட்டி வருவதைக் கண்டித்து டெல்லியில் உள்ள தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது.
இன்று காலை அந்தப் போராட்டம் தொடங்கியது. இதில் தமிழறிஞர்கள் பலரும் பங்கேற்றனர். மேலும், திமுக,மதிமுக உள்ளிட்ட கட்சியினரும், எம்.பிக்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் தவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோரும் உண்ணாவிரதம்இருந்து வருகின்றனர்.
பல்டி பா.ஜ.க:
உண்ணாவிரதத்தில் பங்கேற்பதாக முன்பு அறிவித்திருந்த தமிழக பா.ஜ.க.வினர் கடைசி நேரத்தில் அதில் கலந்து கொள்ள மாட்டோம்என்று அறிவித்துவிட்டது.
உண்ணாவிரதத்தில் தமிழக பா.ஜ.க எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அகில இந்தியபா.ஜ.க. செயலர் இல.கணேசன் திடீரென்று பல்டி அடித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உண்ணாவிரத்தில் பங்கேற்பது சரியல்ல என்று கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.எனவே நாங்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இதற்கு மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழுக்காக உண்ணாவிரதம் நடக்கும்போதுதமிழக பா.ஜ.க. மெளம் சாதிப்பது தவறு என்று கூறிய அவர் பிரதமரை இன்றே சந்தித்து இது தொடர்பாக மனு கொடுக்கலாம்என்று யோசனை தெரிவித்தார்.
இதையடுத்து அவர் தலைமையில் இல.கணேசன், ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று காலை பிரதமர் வாஜ்பாயைச்சந்தித்து தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி மனு கொடுத்தனர்.
சென்னையிலும் ஆர்ப்பாட்டம்:
அதே போல தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மெமொரியல் ஹால் அருகே இந்தப் போராட்டத்தை உலகத் தமிழர் பேரவை அமைப்பு நடத்தியது. இந்த அமைப்பின் தலைவர்ஜனார்தனம் ஆர்பாட்டத்துக்குத் தலைமை தாங்கினார். உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை உடனடியாக செம்மொழியாகஅறிவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications