எஸ்மா வழக்கு: 22ம் தேதி எதிர்க்கட்சிகள் போராட்டம்
சென்னை:
எதிர்கட்சித் தலைவர்களான கருணாநிதி, இளங்கோவன், நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது எஸ்மாசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து வரும் 22ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்நடத்த அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தைத் தூண்டி விட்டதாகக் திமுக தலைவர் கருணாநதி, காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாநிலச் செயலர் வரதராஜன் ஆகியோர் மீது தமிழக அரசு எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நேற்று இக் கட்சிகளின் கூட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தஇக் கூட்டத்தில் திமுக சார்பில் அன்பழகன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் செ.குப்புசாமி, காங்கிரஸ்சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ், வரதராஜன், நல்லகண்ணு, இந்தியகம்யூனிஸ்ட் துணைச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் வருகிற 22ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications