இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட 62 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 65 மீனவர்களை, இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றனர். இவர்களில் 62 பேர்இன்று விடுவிக்கப்பட்டனர்.

இந்தக் கடத்தலால் ராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம் நிலவியது.

ராமேஸ்வரம், பாம்பன், நாகப்பட்டிணம் பகுதி மீனவர்களை அடிக்கடி இலங்கை மீனவர்கள் கடத்திச் செல்வதும்,இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் தொடர் கதையாகிவிட்டது.

சில வாரங்களுக்கு முன்பு நாகப்பட்டிணம் பகுதி மீனவர்கள் 15 பேர் கடத்தப்பட்டனர். நேற்று ராமேஸ்வரம் மற்றும்மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 65 மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்று விட்டனர்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 45 மீனவர்களும், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்களும் 15 இயந்திரப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே இவர்களை வழிமறித்த இலங்கை மீனவர்கள் தமிழகமீனவர்களின் படகுகளை உடைத்தனர். பின்னர் மீனவர்களை பிடித்துச் சென்றனர்.

தமிழக மீனவர்கள் நெடுந்தீவு அருகே உள்ள காரை நகர் பகுதியில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்துஇலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.

மேலும் இந்தியக் கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து 62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு இந்திய கடற்படையினரிடம்ஒப்படைத்துள்ளனர். கச்சத் தீவு அருகே இந்த மீட்கப்பட்ட மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

அதேபோல, இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 சிங்கள மீனவர்களை, இலங்கை கடற்படையிடம்,இந்திய கடற்படையினர் அப்போது ஒப்படைத்தனர். இலங்கை சிறை பிடிக்கப்பட்டிருக்கும் எஞ்சியமீனவர்களையும் மீட்க நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

65 மீனவர்கள் கடத்தப்பட்டதால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் நேற்று முதல் பெரும் பதற்றம்நிலவி வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+