தாமரைக்கனி மீது நான்காவதாக மேலும் ஒரு அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கை தமிழக அரசுதொடர்ந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவராக தற்போது தாமரைக்கனி உள்ளார். போடிநாயக்கனூரில் கடந்த பிப்ரவரிமாதம் 4ம் தேதி நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய தாமரைக்கனி முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகபேசியதாக கூறி தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக 22ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் தாமரைக்கனி ஆஜராக வேண்டும் என்று மதுரைநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமரைக்கனி மீது தொடரப்பட்டுள்ள 4-வது அவதூறு வழக்கு இது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications