வாஜ்பாய்க்கு ஆதரவாக வாக்களிக்க வைகோ முடிவு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வாஜ்பாய் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்துவாக்களிக்கப் போவதாக மதிமுக அறிவித்துள்ளது.

இக் கட்சிக்கு 4 எம்.பிக்கள் உள்ளனர். வைகோ கைது செய்யப்பட்டதில் இருந்து பா.ஜ.கவுடன் மதிமுகவுக்குநல்லுறவு இல்லை.

இந் நிலையில் இந்தத் தீர்மானத்தில் வைகோவின் வாக்கையும் பெற முயற்சி செய்யப்படும் எனவும் இதற்காகஅவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்லவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்திருந்தார்.

இந் நிலையில் திமுகவின் முடிவுக்காக மதிமுக காத்திருந்தது. ஒரு நாள் சஸ்பென்சுக்குப் பிறகு வாஜ்பாய் அரசைஆதரித்து வாக்களிக்கப் போவதாக கருணாநிதி அறிவித்தார்.

இதையடுத்து இன்று மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் வேலூர் சிறைக்குச் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் வெளியேவந்த கணேசன், இந்தத் தீர்மானத்தை எதிர்த்தும் அரசை ஆதரித்தும் மதிமுக வாக்களிக்கும் என்று அறிவித்தார்.

வைகோவின் ஓட்டு இல்லாமலேயே வாஜ்பாய் அரசு தப்பிவிடும் என்பதால் வைகோ டெல்லி செல்ல மாட்டார்எனவும் கணேசன் அறிவித்தார். ஆனால், மற்ற 3 மதிமுக எம்.பிக்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்றார்.

வைகோ போய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால் அவரை இன்னேரம் டெல்லிக்கு அழைத்துச்சென்றிருப்போம் என்றார்.

பொடா வழக்கு: தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு

இதற்கிடையே வைகோ தவிர்த்த 8 மதிமுகவினர் மீது பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது, விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்யப்பட்ட அவர்கள் மீதுபூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் வைகோவைத் தவிர மற்ற 8 பேரும், தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு இன்று நீதிபதிகள் தினகர் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் முன்விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், வழக்கிலிருந்து தங்களைவிடுவிக்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றுஅறிவித்தனர்.

மேலும் இந்த வழக்குத் தொடர்பாக 2 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி காவல்துறைக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+