நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் அடி: இனி ஏழைகளுக்கு மட்டுமே ரேஷன்
சென்னை:
மாதம் ரூ. 5,000க்கு கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இனிமேல் ரேஷன் கடைகளில், அரிசி,மண்ணெண்ணை, சர்க்கரை ஆகியவை வழங்கப்படும். அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இனிமேல்கெளரவ குடும்ப அட்டை மட்டுமே வழங்கப்படும். அவர்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் எதுவுமேவழங்கப்பட மாட்டாது.
இந்த அதிரடித் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேசன் மூலமான பொது வினியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள், கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.அதன் முக்கிய அம்சங்கள்:
*தற்போது 8 லட்சம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும்இலவச அசித் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அவர்களுக்கு மாதம்தோறும் 30 கிலோ அரிசி இலவசமாகவழங்கப்படுகிறது.
புதிய திட்டத்தின்படி, இவர்களில் 5.61 லட்சம் பேர் மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவர்.அவர்களுக்கு கிலோ ரூ. 3க்கு, 35 கிலோ அரிசி வரை வழங்கப்படும். மீதமுள்ள 2.46 லட்சம் பேருக்கு கிலோ ரூ.3.50க்கு அரிசி விற்கப்படும். இவர்கள் அதிகபட்சம் 20 கிலோ அரிசி வரை மாதந்தோறும் பெறலாம்.
*வருமான வரி கட்டுவோர், ரேஷன் பொருட்களை பெற விரும்பாதவர்கள், மாத வருவாய் ரூ. 5000க்கு மேல்உள்ளோருக்கு இனிமேல் கெளரவ குடும்ப அட்டையே வழங்கப்படும்.
அவர்களது குடும்ப அட்டையின் மேல் ஹெச் என்று முத்திரை பதிக்கப்படும். இவர்களால் ரேஷன் கடைகளில்விற்கப்படும் பொருட்களை இனிமேல் வாங்க முடியாது. அடையாளத்துக்கு மட்டுமே இனி இவர்கள் ரேசன்அட்டைகளை வைத்திருக்க முடியும்.
*தற்போதுள்ள குடும்ப அட்டைகள் வரும் டிசம்பர்31ம் தேதியுடன் முடிவடைகின்றன. இவற்றை 2004ம் ஆண்டுடிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான பணிகள் வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி இந்த ஆண்டு டிசம்பர்31ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினரை மிக மோசமான நிலைக்குத் தள்ளும் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை. சராசரியாக மாதம் ரூ. 8,000 வரை ஊதியம் வாங்குபவர்கள் வீட்டு வாடகை, குழந்தைகளின்படிப்புச் செலவு, மின் கட்டணம், பெட்ரோல் அல்லது பஸ் கட்டணம் என அடிப்படைத் தேவைகளுக்கே பாதிச்சம்பளத்தை இழந்துவிடுகின்றனர்.
இதன் பின்னர் மீதியில் தான் மாத வாழ்க்கையையே நடத்தியாக வேண்டும். இதில் அரிசி தவிர்த்து சர்க்கரை,கோதுமை, மைதா போன்றவற்றை ரேசன் கடைகளில் வாங்குவதன் மூலம் ஏராளமான அளவில் இந்த நடுத்தரவர்க்கத்தினருக்கு பணம் மிச்சப்பட்டு வந்தது. இனி இவற்றை மும்மடங்கு பணம் தந்து கடைகளில் வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரிய அளவில் விழிப்புணர்ச்சி ஏதும் இல்லாத கீழ் மட்டத்தினரின் வாக்குகளை நிரந்தரமாக்கிக் கொள்ளும்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இனி அவர்களுக்கு மட்டும் ரேசன் பொருட்களைத் தருவது என அதிமுக அரசுமுடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
கொஞ்சம் விவரம் அறிந்த நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு நிரந்தரமாகக் கிடைக்காது என்பதால் அவர்களைக்குறி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதில் மிக மோசமாக பாதிக்கப்படப் போவது பென்சன் வாங்கி அதில் பிழைத்து வரும் குடும்பங்கள் தான். அரசுஅல்லது வங்கி ஊழியர்களாக இருந்து கடைசியாக வாங்கிய ஊதியத்தில் பாதியை பென்சனாகப் பெற்று வரும்இவர்களின் மாதப் பென்சன் சராசரியாக ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரை உள்ளது.
இவர்களுக்கும் இனி ரேசன் பொருள்கள் இல்லை என்ற நிலை உருவாகப் போகிறது.












Click it and Unblock the Notifications