திமுகவுடன் இணைந்து போராட்டம்: காங்கிரசாருக்கு சோனியா அனுமதி
சென்னை:
தமிழக அரசுக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து போராட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அக் கட்சியின்தலைவர் சோனியா காந்தி அனுமதி அளித்துள்ளார்.
எஸ்மா சட்டம் மற்றும் எதிர்க் கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுவது ஆகியவற்றை எதிர்த்து சென்னை உள்படதமிழகம் முழுவதிலும் வரும் 22ம் தேதி நடக்கவுள்ள அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
திமுக தலைமையில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்காது என அக் கட்சியின்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். பா.ஜ.க. கூட்டணியில் திமுக இருப்பதால் இணைந்து போராட்டம்நடத்த முடியாது என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் திமுகவுடன் இணைந்து செயல்படுமாறு சோ.பாலகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் தலைமையிடம் இருந்துஉத்தரவு வந்துள்ளது. இதையடுத்து திமுகவுடன் இணைந்து அதிமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த தமிழககாங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.


