முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கூடாது: ராமதாஸ்
சென்னை:
முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம்எதிரே, பா.ம.க. சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமைதாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தனியார் கல்லூரிகளில் நன்கொடை வசூலிக்கக் கூடாது, அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து நன்கொடையும்,அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மாணவ, மாணவியரின் கல்விக்கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா உடனே உத்தரவிடவேண்டும்.
முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய அரசு முயல்கிறது.இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.
இப்படிப்பட் சட்டம் கொண்டு வந்தால் அது பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிரானதாகஅமையும்.
முற்பட்ட வகுப்பினர் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில்வேண்டுமானால் ஒதுக்கீடு கொடுக்கலாம்.
சமூக நிலையை அடிப்படையாகக் கொண்டே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். சமூகரீதியில்முற்பட்டுவிட்டவர்களுக்கு எப்படி இட ஒதுக்கீடு தர முடியும் என்று கேட்டார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications