வீட்டை உடைத்து 117 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே ராமாபுரம் என்ற இடத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 117 பவுன் கைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனதுகுடும்பத்தினருடன் நேற்று பிற்பகல் வெளியில் சென்று விட்டார். நள்ளிரவில் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் சென்று பீரோவைப் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 117 பவுன் தங்க நகைகள், ரூ. 1.5 லட்சம்பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications