சேலத்தில் தொடரும் கொலைகள்: தனியே இருந்த பெண் கொலை
சேலம்:
சேலம் நகரில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன. நேற்றும் ஒரு பெண் படுகொலைசெய்யப்பட்டார்.
சேலம் நகரில் கடந்த சில மாதங்களில் 4 கொலைகள் நடந்துள்ளன. காங்கிரஸ் மாவட்டத் தலைவரான தாளமுத்துநடராஜன், அவரது வீட்டுக் காவலாளி, அவரைத் தொடர்ந்து கண் டாக்டர் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி,வேலைக்காரி, சமீபத்தில் ஹோமியோபதி டாக்டர் என வீடுகளில் புகுந்து கொலைகள் நடப்பது தொடர்ந்துகொண்டுள்ளன.
இதுவரை இந்தக் கொலைகளில் எந்தத் தடயமும் சிக்கவில்லை. கொலையாளிகள் யார் என்று தெரியாமல்போலீசார் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர். இந்தக் கொலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான்செங்கல்பட்டு எஸ்.பியாக இருந்த அதிரடி அதிகாரியான பொன். மாணிக்கவேல் சேலம் நகருக்குஅனுப்பப்பட்டார்.
நகரில் சட்டம்-ஒழுங்கை அவர் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலும் கொலைகளைத் தடுக்க முடியாமல் திணறிவருகிறார்.
தொடர் கொலைகளால் பீதியில் உள்ள சேலத்தில் மீண்டும் ஒரு கொலை நடந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்தபெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சேலம் கலவரம்பட்டியைச் சேர்ந்த வள்ளி, கணவரைப் பிந்து தனியாக வசித்து வந்தார். இவர் அவ்வப்போதுபாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில் நேற்றிரவு 3 பேர் ஆட்டோவில் வள்ளி வீட்டுக்கு வந்துள்ளனர். சிறிது நேரத்தில் வள்ளியின் அலறல்குரல் கேட்டுபக்கத்து வீடுகளில் வசிப்போர் அங்கு ஓடி வந்தனர்.
அப்போது ரத்த வெள்ளத்தில் வள்ளி பிணமாகக் கிடந்தார். கொலையாளிகள் தப்பிவிட்டனர்.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்து பணம், நகை திருடப்பட்டிருக்கலாம் என்றுபோலீஸார் சந்தேகிக்கின்றனர். இதற்காகவே கொலை நடந்ததாகவும் தெரிகிறது.


