For Daily Alerts
Just In
தஞ்சையை பயமுறுத்திய பாராசூட் !
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் தரையிறங்கிய ஒரு பாராசூட் திடீரென்று வெடித்துச் சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் வடகால் பகுதியில் பிற்பகலில் பாராசூட் ஒன்று பறந்து வந்து வயலில் தரையிறங்கியது. இதைப் பார்த்தஅப் பகுதியினர் அதனருகே ஓடிச் சென்றனர்.
பறந்து வந்த அந்த பாராசூட் தரையைத் தட்டியவுடன் அதன் கீழ் பகுதியில் இருந்த கருவி வெடித்துச் சிதறியது.
இந்தக் கருவியில் பேட்டரி, வயர்கள் ஆகியவை இருந்ததால் வெடிகுண்டாக இருக்கலாமோ என்ற அச்சம்ஏற்பட்டது. இதனால் அப் பகுதியி பயந்து ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட அதிகாரிகள் விரைந்து வந்து சோதனையிட்டனர். அப்போது. வானிலைஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட பராசூட் இது என தெரியவந்தது.


