தா.கி. கொலை வழக்கு: 3 அழகிரி ஆதரவாளர்களுக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் ஆதரவாளர்களானதிமுகவைச் சேர்ந்த மன்னன், எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா ஆகியோருக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்வழங்கியுள்ளது.

சமீபத்தில் தான் அழகிரிக்கு ஜாமீன் கிடைத்தது. இந் நிலையில் அவரது மூன்று தீவிர ஆதரவாளர்களுக்கும் ஜாமீன்தரப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மதுரை மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்தில மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாத்த நீதிபதி சிவப்பிரகாசம், 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

மன்னன் வேலூரிலும், எஸ்ஸார் கோபி திருவண்ணாமலையிலும், கராத்தே சிவா நாகர்கோவிலிலும் தங்கியிருக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள காவல் நிலையங்களில் இவர்கள் கையெழுத்திடவேண்டும்.

9 பேரின் காவல் நீட்டிப்பு:

இந் நிலையில் இதே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 9 திமுகவினரின் காவல் செப்டம்பர் 3ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை 6-வது குற்றவியல் நீதிபதி வனிதா இவர்களது காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதே நீதிமன்றம் கராத்தே சிவா, எஸ்ஸார் கோபி. மன்னன் ஆகியோரின் காவலையும் செப்டம்பர் 3ம் தேதி வரைநீட்டித்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் செசன்ஸ் நீதிமன்றம் இந்த மூவருக்கும் ஜாமீன் வழங்கிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+