செயற் குழுவைக் கூட்டுகிறது காங்கிரஸ்: கலாட்டாக்கள் நடக்கலாம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுக் கூட்டங்கள் வரும் 27ம் தேதிகூட்டப்பட்டுள்ளன.
கட்சியின் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் ஆகியவை ஆகஸ்ட்27ம் தேதி நடக்கின்றன.
காலை 10 மணிக்கு செயற்குழுக் கூட்டமும், பிற்பகல் 3 மணிக்கு அரசியல் விவகாரக் குழுக் கூட்டமும் நடக்கிறது.அதன் பின்னர் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்படுகிறது என்றுகுறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசியல்விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த மூத்த தலைவர்விநாயகமூர்த்தி 2 முறை கோரிக்கை விடுத்து சோ.பா.வுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் கோஷ்டிப் பூசலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.
இந் நிலையில் செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அன்றைய தினம் காங்கிரஸ் அலுவலகத்தில் கலாட்டாக்கள் நடக்க நிறையவே வாய்ப்புண்டு. வேட்டிகளும்கிழியலாம்.












Click it and Unblock the Notifications