தலித் பஞ்சாயத்து தலைவரை செருப்பால் அடித்தவர் கைது
மதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் பஞ்சாயத்துத் தலைவரைசெருப்பால் அடித்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சொட்டதட்டி கிராமத்தில் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன் அங்குள்ளபள்ளியில், பஞ்சாயத்துத் தலைவர் என்ற முறையில் ராஜு தலைமையில் தேசியக் கொடியேற்றும் விழா நடந்தது.
அப்போது மேல் ஜாதியைச் சேர்ந்தத சுப்பையா என்பவர் தனது ஆட்களுடன் அங்கு வந்து, தலித் வகுப்பைச்சேர்ந்த நீ எப்படி கொடி ஏற்றலாம் என்று கேட்டு ராஜுவை செருப்பால் அடித்தார். அவருடன் வந்தவர்களும்ராஜூவைத் தாக்கினர்.
ஆனால், மேல் ஜாதியினருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை திருபுவனம் போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் மூடிமறைக்க முயன்றனர்.
ஆனாலும், இந்த விவகாரம் வெளியே வந்துவிட்டது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிஇது தொடர்பாக ராஜ்பவன் மூலம் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து ராஜுவை செருப்பால் அடித்த சுப்பையாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது ஜாதிரீதியிலான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என தலித் மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், வெறுமனே தகராறு செய்ததாக வழக்கைப் போட்டு அவரைக் காப்பாற்றமுயற்சி நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


