ஆங்கில- தமிழ் மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் அறிமுகம்
சென்னை:
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, டிரான்ஸ்லேசன் சாப்ட்வேரான தமிழ்ப் பொறியை முதல்வர்ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.
![]() |
தமிழ் பொறி மென்பொருளை வெளியிடும் முதல்வர் ஜெயலலிதா. உடன் தொழில்நுட்பத் துறைச்செயலாளர் விவேக் ஹரி நாராயணன், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்ஜெயக்குமார். |
இதன்மூலம் ஆங்கில வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்களை தமிழுக்கு மொழி பெயர்க்க முடியும்.
அல்டிமேட் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.வெறும் ரூ. 4 லட்சம் செலவில் இந்த மென்பொருளை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சாப்ட்வேரை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். ஆங்கில வினாத் தொடர்கள்,வியப்புத் தொடர்கள், ஏவல் தொடர்களை இது தமிழில் மொழி பெயர்த்துத் தரும்.
அது மட்டுமல்லாது, சொற்றொடர்களைப் பிரிக்கும் காற்புள்ளி, அரைப்புள்ளி, இடைவெளி ஆகியவற்றையும்புரிந்து கொண்டு மொழி பெயர்க்கும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் எளிதாக தமிழ் கற்க இந்த மென்பொருள் பெரும் உதவியாக இருக்கும் என்றுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


