வரதட்சணை கொலை: கணவனுக்கு ஆயுள், மாமியாருக்கு கடுங்காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரதட்சணை கேட்டு மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனையும், அவரது தாயாருக்கும்கடுங்காவல் தண்டனையும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1998ம் ஆண்டு இந்தக் கொலை நடந்தது. திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின்மனைவி வனிதா (20). வரதட்சணையாக ஒரு டூ வீலர், ஒரு பசு மாடு, ஆடுகள் வாங்கி வரச் சொல்லிசந்திரசேகரனும் அவரது தாயாரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால், வனிதாவின் வீட்டினரால் இதைத் தர முடியவில்லை. இதையடுத்து 1998ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதிவனிதாவை சந்திரசேகரனும் அவரது தாயாரும் சேர்ந்து கழுத்தை நெறித்துக் கொன்றனர்.

பின்னர் அதை தற்கொலை போல காட்டுவதற்காக வனிதாவின் பிணத்தை ஒரு சேலையில் கட்டி தூக்கில்மாட்டியுள்ளனர்.

இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரன், தாயார், தந்தை ஆகியோரைக் கைதுசெய்தனர். திருச்சி மாவட்ட நீதிமன்ற்ததில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இதில் சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் அவரது தாயார் மற்றும் தந்தைக்கு 8 ஆண்டுகடுங்காவல் தண்டனையும் விதித்தது.

இதை எதிர்த்து இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்கற்பக விநாயகம், அசோக் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் , திருச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புசரியானதே என்று தீர்ப்பளித்தனர்.

ஆனால், சந்திரசேகரன் தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மட்டும் ரத்து செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+