ஈரோடு ரயில் நிலையத்தில் தடம் புரண்ட சென்னை-ஆழப்புலா எக்ஸ்பிரஸ்: ரயில்கள் போக்குவரத்து பாதிப்பு
கோவை:
சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினும் இருபெட்டிகளும் ஈரோடு ரயில் நிலையத்துக்குள் இன்று அதிகாலை தரம்புரண்டன. இதனால் இந்த மார்க்கத்தில்அனைத்து ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3 மணியளவில் இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது. அப்போது ரயிலின் என்ஜினும்அதன் பின்னால் இருந்த இரு பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.
இதனால் பயங்கர ஒலி எழுந்தது. ரயிலும் பயங்கரமாகக் குலுங்கியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள்அலறிக் கொண்டு எழுந்தன்.
இதையடுத்து அந்த இரு பெட்டிகளையும் என்ஜினையும் அந்த இடத்திலேயே விட்டுவிட்டு பிற பெட்டிகள்இன்னொரு என்ஜின் மூலமாக பின்னால் இழுத்துச் செல்லப்பட்டன. காவிரி ரயில் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் இன்னொரு தண்டவாளம் வழியாக அந்தப் பெட்டிகள் ஈரோடு ரயில் நிலையத்துக்குள்கொண்டு வரப்பட்டன.
இதனால் அப்போது ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரஸ், குர்லாஎக்ஸ்பிரஸ், பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை வழியிலேயே நிறுத்த வேண்டிய நிலைஏற்பட்டது. இவை சுமார் 4 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு கிளம்பிச் சென்றன.
தண்டவாளத்தில் இருந்த சிறிய பிரச்சனையே இந்த தடம் புரளலுக்குக் காரணம் என்று தெரிகிறது. தடம்புரண்டஎன்ஜினையும் பெட்டிகளையும் அங்கிருந்து அகற்றும் பணி முழு வீச்சில் நடந்தது. இன்று காலை இந்தப் பணிமுடிவடைந்தது ரயில் போக்குவரத்து சீரானது.
முன்னதாக தடம் புரண்ட ஆழப்புழா எக்ஸ்பிரசில் இருந்த அனைத்துப் பயணிகளும் வேறு ரயில் முலம்ஆலப்புழைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications