காங். அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை:
முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 27ம் தேதி கூடுவதாக இருந்த தமிழக காங்கிரஸ்கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சத்தியமூர்த்தி பவன்வளாகத்தில் இளங்கோவன் மற்றும் வாசன் கோஷ்டியினர் போட்டி உண்ணாவிரதம் நடத்தினர். அடிதடியும்நடந்தது.
இந் நிலையில் கட்சியின் கோஷ்டி மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், திமுகவுடன்சேர்ந்து செயல்படுவது சரிதானா என்பது குறித்து விவாதிக்கவும் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக்கூட்டுமாறு வாசன் கேஷ்டியினர் கோரி வந்தனர்.
இதைத் தொடர்ந்து வருகிற 27ம் தேதி செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெறும் என்றுகட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் அறிவித்திருந்தார். இந் நிலையில் கூட்டம் தற்போது திடீரென்று தள்ளிவைக்கப்பட்டு விட்டது.
இதுதொடர்பாக சோ.பா. கூறுகையில், அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டம்நடக்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். கூட்டத்தில் வாசன் கோஷ்டி பிரச்சனையைக் கிளப்பலாம்என்பதசால் அதைத் தவிர்க்கவே கூட்டத்தையே ஒத்தி வைத்துவிட்டதாகத் தெரிகிறது.


