மழை நீர் சேகரிப்புக்காக "ஒடும்" 6 வயது சிறுமி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

மழை நீர் சேரிகப்பை வலியுறுத்தி, 6 வயதே ஆகும் வாணியம்பாடியைச் சேர்ந்த பிரீத்தி என்ற சிறுமி, 72 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடக்க திட்டமிட்டுள்ளார்.

மழை நீர் சேகரிப்பு குறித்து அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் அனைத்து வீடுகள், கட்டடங்களில்மழை நீரை சேமித்து வைக்கவும், அதை சாக்கடையில் ஓட விடாமல் பூமிக்குள் திரும்ப அனுப்பவும் வடிகால்அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 6 வயதாகும் பிரீத்தி, மழை நீர் சேகரிப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவாணியம்பாடியிலிருந்து வேலூர் வரை 72 கிலோ மீட்டர் தூரத்தை தொடர் ஓட்டம் சென்று கடக்க முடிவுசெய்துள்ளார்.

வாணியம்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்புப் படித்து வருகிறார் பிரீத்தி. கராத்தேயில், ஷிடோ பிரிவில்பச்சை பெல்ட் வாங்கியுள்ளார்.

அகில இந்திய கராத்தே மற்றும் குங்பூ போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். தீக்குழியில் இறங்கிநடந்துள்ளார், ஆணிகளால் ஆன படுக்கையிலும் நடந்துள்ளார். இவ்வாறு பல சாதனைகளைச் செய்துள்ள பிரீத்தி,மேலும் பல சாதனைகளைப் படைக்க காத்துள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலக அமைதியை வலியுறுத்தி, திருப்பத்தூரிலிருந்து, வாணியம்பாடிக்கு தொடர்ந்து27 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் ஓடிக் கடந்தார்.

இப்போது மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி வாணியம்பாடியிலிருந்து வேலூருக்கு ஓட்டம் மேற்கொள்ள முடிவுசெய்துள்ளார் பிரீத்தி. அவரது இந்த ஓட்டம் இன்று வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்குகிறது.

தொடர்ந்து 7 மணி நேரம் ஓடி 72 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கிறார் பிரீத்தி. அவரது ஓட்டத்தை முன்னாள்அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏவுமான வடிவேலு கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்வேலூரில் பயணத்தை முடிக்கும்போது ஆட்சித் தலைவர் மோகன் தாஸ் பிரீத்தியை வரவேற்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+