பாட்ஷாவை விடுதலை செய்யாவிட்டால்... ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை திருமங்கலம் ரயில் நிலையத்திற்குக் குண்டு வைக்கப் போவதாக வந்த மிரட்டலையடுத்து அங்கு தீவிரபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருமங்கலம் ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில்,
அல்-உம்மா தலைவர் பாட்சா உள்ளிட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால்விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரயில் நிலையத்திற்குக் குண்டு வைக்கப்படும்.
அத்தோடு கொல்லம் மெயில் ரயிலும் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் போலீஸில் புகார் தந்தார். இதைத் தொடர்ந்து திருமங்கலம் ரயில் நிலையத்தில் போலீஸார்பாதுகாப்பப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு கண்காணிப்புக் கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications