காங்கிரசில் மீண்டும் கோஷ்டி மோதல்: சோ.பா, இளங்கோவனுக்கு எம்.பி. எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
பா.ஜ.க.வுடன் உறவு வைத்துள்ள திமுகவுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோருக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்சுதர்சன நாச்சியப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நடந்த கட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மாநில பா.ஜ.க.வுடன் உறவு முறிந்து விட்டதாக திமுக கூறினாலும் கூட, ரகசியமாக அந்த உறவு நீடித்து வருகிறது.இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.
காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் திமுக நடத்தும்போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது. திமுகவை காங்கிரஸ் நம்பவே கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications