அடித்த கையிடமே அரசியல் பிச்சை கேட்கும் கருணாநிதி: ஜெ. கடும் தாக்கு
சென்னை:
தன்னை அடித்த "கை"யிடமே அரசியல் பிச்சை கேட்டு நிற்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று காங்கிரஸ், திமுகஇடையே உருவாகி வரும் புதிய உவு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா.
அதிமுகவைச் சேர்ந்த 9 ஜோடிகளின் (ஜெயலலிதாவின் ராசி எண் 9 !!!) திருமணத்தை சென்னையில் நடத்தி வைத்தஜெயலலிதா, கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை மறைகமாக மிகக் கடுமையாகவிமர்சித்தார்.
அவர் கூறியதாவது:
இங்கே சில வேடிக்கைத் தலைவர்கள் உள்ளனர். தங்களைத் தாங்கிப் பிடிக்க ஒரு "கை" வேண்டும் என்றுஅலைகிறார்கள். அதுவும் எப்படி, வெளிநாட்டுக் "கை"யாக இருந்தாலும் பரவாயில்லை என்று அலைகிறார்கள்.
அந்தக் "கை" தங்களை அடித்தாலும் பரவாயில்லை என்று அரசியல் பிச்சை எடுக்கிறார்கள். கேட்டால், அடிக்கிற கைதான் அணைக்கும் என்று பழமொழி பேசுவார்கள்.
மரத்தில் ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும்போதே (பா.ஜ.க. கூட்டணி) அடுத்த கிளைக்கு (காங்கிரஸ்கூட்டணிக்கு) எப்போது தாவலாம் என்ற சிந்தனையில் இருப்பவர்கள் இவர்கள்.
இவர்களுக்கு ஏது சுயமரியாதை, வீரம்? இவர்களுக்கு மக்கள் எப்படி மரியாதை தருவார்கள்? அதை எதிர்பார்க்கஇவர்களுக்கு தகுதி உள்ளதா?
வாழ்க்கையில் உறுதியான மனப்பான்மை வேண்டும்.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு பெண் கைகள் இல்லாமல் இருந்தாள். ஆனால் குதிரையேற்றம், ஓவியம் தீட்டுதல் எனபல துறைகளிலும் அவள் திறமை பெற்றிருந்தாள். கைகளே இல்லாத நிலையிலும், மனம் தளராமல் அவள் சாதனைபடைத்தாள்.
அதிமுகவுக்கு சுயமரியாதை நிறையவே உள்ளது. எனவே எந்தக் "கை"யையும் நம்பி அதிமுகவும், அதன்தொண்டர்களும் இல்லை. சுவிட்சர்லாந்து நாட்டுப் பெண் போல கைகளை நம்பியில்லாமல், சொந்தக் கால்களில்நிற்க அதிமுக தொண்டர்கள் கற்றுக் கொண்டவர்கள் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications