ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: அண்ணாச்சி மீதான வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் சரவண பவன்ஹோட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் 15ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரின்ஸ் சாந்தகுமாரைக் கடத்திச் சென்று கொடைக்கானல் மலையில் வைத்துக் கொலை செய்து மலையில்பிணத்தை தூக்கி எறிந்ததாக ராஜகோபால் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஜீவஜோதியைஅடைவதறகாக ராஜகோபால் இதைச் செய்தார்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பாக ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது ராஜகோபாலின் வழக்கறிஞர், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டு, உயர்நீதிமன்றம், வழக்கை மாற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தெளிவின்மை காணப்படுகிறது. எனவே தெளிவான உத்தரவை வாங்கிவருமாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.
ஜீவஜோதியை அவரது வீட்டுக்குச் சென்று மிரட்டியதாக சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ராஜகோபால்,அந்த வழக்கில் தற்போது ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பிரச்சனைகளுககுப் பிறகும் ஜீவஜோதி-ராஜகோபால் இடையே செல்போனில் காதல் தொடர்ந்துகொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications