பொடா பயன் தரவில்லையே- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மும்பையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:

மும்பையில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் மிகவும் அதிர்ச்சி தருகிறது.அதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாத்தை ஒடுக்க கொண்டு வரப்பட்ட பொடா சட்டம் இது போன்ற சம்பவங்களில் பலியானஅப்பாவிகளைக் காப்பாற்ற பயன்படவில்லை. எதிர்க் கட்சியினரையும், பத்திரிக்கையாளர்களையும்பழி வாங்கவே பயன்படுகிறது என்பதை இப்போது நினைவு கூற விரும்புகிறேன்.

அயோத்தியில் இந்துக் கோவில் இருந்தது என்று தொல்பொருள் துறை அறிக்கை தாக்கல்செய்துள்ளதை இட்டுக்கட்டிய தகவல் என்று அயோத்தி பாபர் மசூதிக் குழு வக்கீல் கூறியுள்ளார்.அதேபோல, வக்ப் வாயம் இந்த அறிக்கையை ஏற்கவில்லை.

வெளிநாட்டுக் கைக்காக நாங்கள் அலைவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதேஜெயலலிதா, முன்பு குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், சோனியா காந்தியை பிரதமராக்கஆதரவு தருவதாக கடிதம் எழுதியுள்ளார். அப்போது அவரது சுயமரியாதை எங்கே போயிற்றுஎன்பதை அறிய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+