அரிவாளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த கவுன்சிலர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாநகராட்சி கவுன்சிலரான கணேசன் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனுகொடுப்பதற்காக அரிவாளுடன் வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சியின் 53-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கணேசன். இவரது வார்டுக்குட்பட்ட மாநகராட்சிஇடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் மனு கொடுக்க முடிவு செய்தார் கணேசன்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அய்யனார் தலைமையில் குறை தீர்ப்புக்கூட்டம் நடந்தது.

அப்போது ஒரு கையில் அரிவாளும், இன்னொரு கையில் மனுவுமாக அங்கு வந்தார் கணேசன்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரைத் தடுத்து அரிவாள் எதற்கு என்று கேட்டனர்.

சொந்தப் பாதுகாப்புக்காகத் தான் கையில் வைத்துள்ளேன் என்று பதில் தந்தார் கணேசன். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. அங்கு வந்திருந்த பொது மக்கள் பயந்து போய் நிற்க, அதிகாரிகளுக்கு வியர்த்து ஊற்றியது.

அவரிடம் மிக பவ்யமாக மனுவை வாங்கிக் கொண்ட அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து அரிவாளுடன் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்கணேசன். இவர் மீது யாரும் போலீசில் புகாரும் தரவிவ்லை, போலீசாரும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+