For Daily Alerts
Just In
மும்பை குண்டு வெடிப்பு: இஸ்லாமிய கட்சி கண்டனம்
சென்னை:
மும்பையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லீம் மக்கள் கட்சி கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் தலைவர் எஸ்.எம்.பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இது பயங்கரவாத செயல். இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இதில் துரதிர்ஷ்டவசமான விஷயம்என்னவென்றால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், அனைத்து இஸ்லாமிய மக்கள் மீதும்,இஸ்லாமிய அமைப்புகள் மீதும் அரசு சுட்டு விரலை நீட்டுகிறது. இது வருத்தத்துக்குரிய விஷயம்.
இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இதைச் செய்பவர்கள் உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.


