உ.பி: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் முலாயம் சிங்

Subscribe to Oneindia Tamil

லக்ளென:

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க முலாயம் சிங் யாதவ் உரிமை கோரியுள்ளார்.

பா.ஜ.கவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து இரு தினங்களுக்கு முன் சட்டசபையைக் கலைக்கக் கோரினார் அம்மாநில முதல்வர் மாயாவதி, நேற்று தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்துவிட்டார்.

இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பா.ஜ.க. முயன்று வருகிறது. ஆனால், மாற்றுஅரசு அமைக்கத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.அவருக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவு தந்துள்ளன.

மேலும பா.ஜ.கவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அதிருப்தியாளர்களும்முலாயமை ஆதரிப்பார்கள் என்று தெரிகிறது.

ஆட்சி அமைக்க 202 எம்.எல்.ஏக்கள் தேவை. முலாயமுக்கு இப்போது 190 பேரின் ஆதரவு உள்ளது. இதையடுத்துமெஜாரிட்டியை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் பட்டியலைத் தருமாறு ஆளுநர் சாஸ்த்ரி, முலாயமிடம்கோரியுள்ளார்.

ஆனால், பட்டியல் எல்-லாம் தர மு---டி-யா-து என மு-லா-யம் சிங் கூறி-விட்-டார். மெ-ஜா-ரிட்-டியை நிரூ-பிக்-க வேண்-டி-யஇடம் சட்-ட--மன்-ற-மே தவி-ர, ராஜ்-ப-வன் அல்-ல என்-று கூறி-விட்-ட மு-லா-யம், மு-த-லில் ஆட்--சி அமைக்-க எங்-க-ளைஅழைக்-க வேண்-டும் என்-றார்.

தனக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லாததால் அந்த முயற்சியில் இறங்குவதை பா.ஜ.க.தவிர்த்துவிட்டது. அதே நேரத்தில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்க முயன்று வருகிறது.

இந் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கூடாது. இதை எந்தக் கட்சியும்விரும்பவில்லை. அனைத்துக் கட்சிகளும் விரும்பினால் அங்கு தேர்தலை நடத்துவதே சிறந்த வழி.

பிரச்சினையைத் தீர்க்க குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்வது, சட்டசபையைக் கலைப்பது போன்றவைநல்லதல்ல. முலாயம் சிங் யாதவிற்கும் போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லை. 144 பேர் மட்டுமே உள்ளனர். இதைவைத்து ஆட்சியமைக்க முடியாது என்றார் கருணாநிதி.

ஆனால், இதன் பின்னர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், அஜீத் சிங்கின் கட்சி போன்றவை முலாயமுக்கு ஆதரவுதெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+