தெய்வத்தின் கையில் ஏ.கே-47!!
சென்னை:
வினாயகர் சிலைகளின் கையில் ஏ.கே.-47 துப்பாக்கிகளை வைத்து ஊர்வலமாகக் கொண்டு வருகிறார்கள்.இதனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பொது சிவில் சட்டம் இந்தியாவுக்குப் பொருந்தாது. அப்படியே கொண்டு வருவதாக இருந்தாலும், முதலில்இந்துக்களில் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் இந்து பொது சிவில் சட்டம் தான் கொண்டு வர வேண்டும்.நாட்டில் 87 சதவீத இந்துக்கள் உள்ளனர். அனைவரும் சமமாக சமூக அந்தஸ்துடன் வாழ்கிறோமா என்றால்இல்லை. இதனால் முதலில் இந்து பொது சிவில் சட்டம் தான் அவசியம் என்று கருதுகிறேன்.
வழிபாட்டுக்குரிய எந்த தெய்வத்தின் சிலையையும் களி மண்ணால் செய்து நீரில் கரைப்பது தமிழ் வழிபாட்டுமரபுக்கு முரணானது. அது வட இந்தியப் பழக்கம். பிற சமுதாயத்தை சீண்டவே வினாயகர் சிலை ஊர்வலமேநடத்தப்படுகிறது.
இப்போதையே விழாக்களே வன்முறைக் கலாச்சாரத்துக்கு தூண்டுதலாக அமைந்து விடுகின்றன. உதாரணமாகபிள்ளையார் கையில் ஏ.கே-47 துப்பாக்கியை கொடுக்கிறார்கள். அடுத்ததாக வெடிகுண்டுப் பிள்ளையார்செய்வார்களோ, என்னவோ?
.இது போன்ற சிலைகளால் வன்முறை தான் அதிகரிக்கிறது. இதனால் வினாயகர் சிலை ஊர்வலத்தையே முதலில்தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக ஆளுநரையும் முதல்வரையும் சந்தித்து முறையிட இருக்கிறேன் என்றார்கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications