கோபாலை விடுவிக்க கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை :

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர் மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோபாலின் சகோதரர் குருசாமி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கோபால் கடந்த ஏப்ரல் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சத்தியமங்கலம்காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் அவர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் கோபாலுக்குதமிழர் விடுதலைப் படை நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அவடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்செய்யப்பட்டதாகவும் போலீஸார் கூறினர்.

அதன் பின்னர் அவர் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பொடா சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஒருவர் 90 நாட்களுக்குப் பிறகு, போதிய காரணம் இன்றி, சிறையில்வைத்திருக்க முடியாது. அவர் விடுவிக்கப்பட வேண்டும்.

எனவே அரசின் நடவடிக்கை பொடா சட்ட விதிகளை மீறும் வகையில் உள்ளது. இதனால் கோபாலைநீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டவும், அவரை விடுதலை செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று தனதுஹேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியுள்ளார் குருசாமி.

மனுவைப் பசீலித்த நீதிபதிகள் சிர்புர்கர், தினகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழகுத்தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கோவை சிபிசிஐடி டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+